Animal SAYS: Adoption centre – இடம் தேவை!
- The SAYS charitable trust

- Jul 3, 2025
- 1 min read
அனிமல் SAYS அறக்கட்டளை கடந்த 10 ஆண்டுகளாக விலங்குகளுக்கான நலச்செயல்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீதிகளில் தவிக்கும் உயிர்களுக்கு பாதுகாப்பான இடம், உணவு, மருத்துவம், மற்றும் அன்பான வாழ்க்கை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இப்போது, அந்த சேவையை ஒரு படி மேம்படுத்தி, நாய்கள் மற்றும் பூனைகளுக்கான அடோப்ஷன் சென்டர் ஒன்றை உருவாக்க விரும்புகிறோம்.
அதற்காக எங்களுக்குத் தேவை:
🧱 4000 - 5000 சதுர அடி பரப்பளவுள்ள இடம் – கட்டடம் இருந்தால் சிறந்தது.
🏠 இது ஒரு நிரந்தர சென்டராக உருவாக்கப்படும்; வாடகை அல்ல, முழுமையாக நன்கொடையாக வழங்க விரும்புகிறோம்.
இந்த மையம் என்ன செய்யும்?
• வீதியில் தவிக்கும் நாய்கள், பூனைகள் தற்காலிகமாக பாதுகாக்கப்படுவர்
• மக்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு விலங்கு நலன்கள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும்
• அன்பான குடும்பங்களுக்கு தத்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படும்
• மருத்துவம், பராமரிப்பு, மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய சமூக சேவை மையமாக செயல்படும்
ஏன் இது முக்கியம்?
ஒரு உயிரின் வாழ்க்கை, நம் ஒரு செயலில் திருப்பமடையக்கூடியது. இந்த சென்டர் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாப்படையப்போகின்றன. அதேசமயம், மாணவர்கள், குழந்தைகள், இளம் தலைமுறை விலங்குகளின் மீது அக்கறை வளர்க்கும் வாய்ப்பும் பெறுகிறார்கள்.
இடம் வழங்க தயாராக இருக்கிறீர்களா? அல்லது ஒருவரை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா?
Preferred locations - Chennai, Madurai or surroundings ~ Tamil Nadu.
Vijaywada, Amaravati or surroundings ~ Andhra Pradesh.
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:
📞 தொலைபேசி: +91-8610498619
🌐 இணையதளம்: www.sayscommunity.in
📸 Instagram: @animal_says

Comments